You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNAU Spot Admission 2023 | வேளாண்மை பல்கலைக்கழகம் உடனடி மாணவர் சேர்க்கை

tnau certficate verfication news

TNAU Spot Admission 2023 | வேளாண்மை பல்கலைக்கழகம் உடனடி மாணவர் சேர்க்கை

TNAU Spot Admission 2023  

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 15.9.2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், இணைப்புக்கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 22.09.2023 அன்று நடைபெற உள்ளது.

நேரடி கலந்தாய்வு

உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கலந்தாய்விற்குரிய குறிப்பிட்ட தேதியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூரில் வந்து கலந்துகொள்ள வேண்டும்.

Read also: TNAU UG ADMISSION 2023 Latest News

நிபந்தனைகள்:

உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். உறுப்புக்கல்லூரிகளுக்கு பொருந்ததாது.

உடனடி மாணவர் சேர்க்கையில் இடம்கிடைக்கப் பெற்ற மாணவர்களிடமிருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும் மற்றும் உடனடி மாணவர் சேர்க்கைக்கு நகர்வு முறை (Sliding System) கிடையாது.

யார் கலந்துகொள்ளலாம்

பொதுகலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று கலந்தாய்வினை தவறவிட்டவர்கள் மற்றும் இடம்கிடைத்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள்.

யார் கலந்துகொள்ளகூடாது

பொதுகலந்தாய்வில் இடம்கிடைக்கப்பெற்று ஏற்கனவே சேர்க்கை பெற்றவர்கள் அல்லது இடைநிறுத்தம் செய்து கொண்டவர்கள்.

கட்டணம்

உடனடி மாணவர் சேர்க்கையில் (Spot Admission) கலந்துகொள்ளும் மாணவர்கள், கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களில் SC / SCA/ ST பிரிவு மாணவர்கள் ரூபாய்1500/- மற்றும் இதர பிரிவினர் ரூபாய். 3000/- செலுத்த வேண்டும்.

இணைப்புக்கல்லூரிகளுக்கான ஆண்டுக் கட்டணம்

இணைப்புக் கல்லூரிகளுக்கான ஆண்டுக் கட்டணம் ரூபாய். 40,000/- முதல் ரூபாய். 50,000/- வரை (உணவு மற்றும் தங்குமிடக் கட்டணம் நீங்கலாக) இருக்கும்.

பின்பற்ற வேண்டியவை,

  • உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வளாகத்திற்கு வர வேண்டும்.
  • உடனடி மாணவர் சேர்க்கையின்போது இணைப்புக்கல்லூரிகளுக்கான உணவு மற்றும் தங்குமிடக்கட்டணம் குறித்த விவரங்களை, மாணவர்கள் இணைப்புக்கல்லூரி ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.
  • உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொண்ட மாணவர்களின் வருகைப்பதிவேடு குறிக்கப்பட்டு, தரவரிசை நிர்ணயிக்கப்படும்.
  • உடனடி மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களுக்கு கல்லூரி காலியிடம் திரையில் தெரிவிக்கப்படும்.
  • தரவரிசையின் அடிப்படையில், மாணவர்கள் கல்லூரி மற்றும் பட்டப்படிப்பினை தேர்வு செய்ய அழைக்கப்படுவார்கள்.
  • உடனடி மாணவர் சேர்க்கையின்போது இடம்கிடைக்கப்பெற்ற மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு கட்டணத்தை செலுத்தி உடனடியாக கல்லூரியில் சேரலாம், பணம் கட்டுவதற்கான வசதி பல்கலைக்கழக வளாகத்திலேயே செய்யப்பட்டு இருக்கும்.
  • உடனடி மாணவர் சேர்க்கையின்போது சாதியின் அடிப்படையிலும் மற்றும் கல்லூரி வாயிலாக கல்லூரியிலோ அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டவுடன், காத்திருப்பு பட்டியல் உருவாக்கப்படும்.
  • உடனடி மாணவர் சேர்க்கை நடைபெற்ற, ஒருவார காலத்திற்குப் பிறகு மாணவர் சேர்க்கை காலியிடங்கள் ஏதேனும் இருந்தால் மீண்டும் ஒரு உடனடி
  • மாணவர் சேர்க்கை மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும்.
  • உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்க இயலாது.
உடனடி மாணவர் சேர்க்கைக்கான வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மற்றும் காலியிடங்களுக்கான அட்டவணை 21.09.2023 அன்று http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.

உடனடி மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை அறிய விரும்பும் மாணவர்கள் 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் அல்லது ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.