You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNAU Spot Admission 2023 | ேவளாண்மை பல்கலைக்கழகம் உடனடி மாணவர் சேர்க்கை பிப்.20 நடக்கிறது

TNAU UG Admission Certificate Verification Date

TNAU Spot Admission 2023 | ேவளாண்மை பல்கலைக்கழகம் உடனடி மாணவர் சேர்க்கை பிப்.20 நடக்கிறது

TNAU Spot Admission 2023

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள 1,412 மாணவர் சேர்க்கைக்கான இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை 20.2.2023 அன்று நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்தாய்விற்குரிய குறிப்பிட்ட தேதியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோவையில் நடைபெற உள்ளது. இது உறுப்பு கல்லூரிகளுக்கு பொருந்தாது. உடனடி மாணவர் சேர்க்கையில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களிடம் இருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும்.

பொதுகலந்தாய்வில் ஏற்கனவே கலந்துகொள்ளாதவர்கள், பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று கலந்தாய்வினை தவறவிட்டவர்கள் அல்லது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் மற்றும் இடம் கிடைக்கப்பெற்று சேர்க்கை பெறாதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். மாணவர் சேர்க்கை பெற்று இடைநிறுத்தம் செய்து கொண்டவர்கள் கலந்துகொள்ள கூடாது.

மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. கலந்தாய்வில் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவு ரூபாய் 1500 மற்றும் இதர பிரிவினர் ரூபாய் ரூ 3000 செலுத்த வேண்டும்.

உடனடி மாணவர் சேர்க்கைக்கான வகுப்பு வாரியான இடஒதுக்கீடு கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மற்றும் காலியிடங்களுக்கான அட்டவணை இன்று (16.2.2023) www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.

உடனடி மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை அறிய விரும்பும் மாணவர்கள் 0422 -6611345 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது ugadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.