TNAU Spot Admission 2023| TNAU Spot Admission Date | வேளாண்மை பல்கலைக்கழகம் ஸ்பாட் அட்மிஷன்
TNAU Spot Admission 2023
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1105 மாணவர் சேர்க்கைக்கான இடங்களை நிரப்புவதற்கான உடணடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 24012023 அன்று நடைபெற உள்ளது.
நேரடி கலந்தாய்வு
உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கலந்தாய்விற்குரிய குறிப்பிட்ட தேதியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயமுத்தூரில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.
நிபந்தனைகள்
உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருத்தும் உறுப்புக் கல்லூரிகளுக்கு பொருந்ததாது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் ஏதேனும் காலியாக இருந்தால் அவை காலியிடங்களாகவே கருதப்படும். உடனடி மாணவர் சேர்க்கையில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களிடமிருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும் மற்றும் உடனடி மாணவர் சேர்க்கைக்கு நகர்வு முறை (Sliding System) கிடையாது.
Read Also: வேளாண்மை பல்கலைக்கழகம் கலந்தாய்வு
யார் இதில் கலந்து கொள்ளலாம்?
பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று கலந்தாய்வினை தவறவிட்டவர்கள் அல்லது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள் மற்றும் புதிதாக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களும் கலந்து கொள்ளலாம்.
யார் இதில் பங்கேற்ககூடாது?
பொது கலத்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், சேர்க்கை பெற்றவர்கள் அல்லது இடைநிறுத்தம் செய்து கொண்டவர்கள்.
கட்டணம்
உடணடி மாணவர் சேர்க்கையில் (Spot Admission) கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் SC/SCA/ST பிரிவு ரூபாய் 1500 மற்றும் இதர பிரிவினர் ரூபாய் 3000 செலுத்த வேண்டும்.
இணைப்புக் கல்லூரி ஆண்டு கட்டணம்
இணைப்புக் கல்லூரிகளுக்கான ஆண்டுக் கட்டணம் ரூபாய் 40000 முதல் ரூபாய். 50,000/- வரை (உணவு மற்றும் தங்குமிடம் கட்டணம் நீங்கலாக) இருக்கும்.
மாணவர் சேர்க்கை நாளன்று பின்பற்ற வேண்டியவை
- உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வளாகத்திற்கு வர வேண்டும்.
- உடனடி மாணவர் சேர்க்கையின் போது இணைப்புக் கல்லூரிகளுக்கான உணவு மற்றும் தங்குமிடம் கட்டணம் குறித்த விவரங்களை, மாணவர்கள் இணைப்புக் கல்லூரி ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
- உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொண்ட மாணவர்களின் வருகைப்பதிவேடு குறிக்கப்பட்டு தரவரிசை நிர்ணயிக்கப்படும்.
- உடனடி மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களுக்கு கல்லூரி காலியிடம் திரையில் தெரிவிக்கப்படும்.
- தர வரிசையின் அடிப்படையில் மாணவர்கள் கல்லூரி மற்றும் பட்டப்படிப்பினை தேர்வு செய்ய அழைக்கப்படுவார்கள்.
- உடனடி மாணவர் சேர்க்கையின் போது இடம் கிடைக்கப் பெற்ற மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு கட்டணத்தை செலுத்தி உடனடியாக கல்லூரியில் சேரலாம், பணம் கட்டுவதற்கான வசதி பல்கலைக்கழக வளாகத்திலேயே செய்யப்பட்டு இருக்கும்
- உடனடி மாணவர் சேர்க்கையின் போது சாதியின் அடிப்படையிலோ அல்லது கல்லூரியிலோ அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டவுடன் காத்திருப்புபட்டியல் உருவாக்கப்படும்.
- உடனடி மாணவர் சேர்க்கை நடைபெற்ற ஒருவார காலத்திற்குப்பிறகு மாணவர் சேர்க்கை காலியிடங்கள் ஏதேனும் இருந்தால் மீண்டும் ஒரு உடனடி மாணவர் சேர்க்கை மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும்.
- உடணடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்க இயலாது.
- உடனடி மாணவர் சேர்க்கைக்கான வகுப்பு வாரியான இட ஒதுக்கீடு கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மற்றும் காலியிடங்களுக்கான அட்டவணை 20.01.2023 அன்று www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்
- உடனடி மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை அறிய விரும்பும் மாணவர்கள் 0422-6611345 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.