தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கத்தில் அரிசி மற்றும் சிறுதானியங்கள் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த இரண்டு நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர், இறுதி ஆண்டு பயிலும் பட்டதாரிகள் மாணவர்கள், பிற பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பங்கு பெறலாம். இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வரும் பிப்ரவரி 05 மற்றும் 06 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ 3,540 பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளன.
மேலும் பதிவுக்கு மின்னஞ்சல் business@tnau.ac.in தொலைபேசி எண் 0422 - 6611310