TNAU Rank List Released 2023 | TNAU Rank List PDF 2023 Download | வேளாண்மை பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியல்
TNAU Rank List Released 2023
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி திவ்யா தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் இணைந்து பொதுவான இணையதள மூலம் இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கான தரவரிசைப்பட்டியலை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வெளியிட்டார்.
இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல, நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் தரவரிசைப்பட்டியல் அங்கு தனியாக வெளியிடப்படும். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 5,361 இடங்களுக்கு 41,434 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 36,612 பேர் தரவரிசைக்குத் தகுதியானவர்கள்.
Read Also: TNAU Rank List PDF 2023 Download
அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 10,887 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 403 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர்களின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும். கடந்த ஆண்டைவிட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். தமிழ் வழியில் வேளாண் படிப்புகள் படிக்க 100 இடங்களுக்கு 9,997 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
3 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆஃப் எடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், சித்தமூர் பகுதியைச் சேர்ந்த மாணவி திவ்யா முதலிடமும், உசிலம்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீராம் இரண்டாம் இடமும், சங்கரன்கோவில் மாணவி முத்துலட்சுமி மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
ஜூன் மாதம் 3ஆவது வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. ஜூலை கடைசி வாரத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும். கலந்தாய்வு முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்க்க மட்டும் நேரில் வர வேண்டும்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இந்த ஆண்டு இரண்டு மாதங்கள் தாமதமாகியுள்ளது. ஆளுநர் அலுவலகத்தில் இருந்து ஜூலை மாதம் தேதி கொடுப்பதாகக் கூறியுள்ளனர். மாணவர்களுக்கு அவசரமாக சான்றிதழ் தேவைப்படும்பட்சத்தில் சான்றிதழ் அளிக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழ் இல்லாததால் மாணவர்களுக்கு விசா எதுவும் மறுக்கப்படவில்லை. அது தவறான தகவல். 2,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிப்பு விழாவுக்காக காத்திருக்கின்றனர்.
துணைவேந்தர் மாநாடு தொடர்பாக அரசுத் தரப்பில் இருந்தோ, ஆளுநர் அலுவலகத்தில் இருந்தோ எந்த அழுத்தமும் தரப்படவில்லை. தமிழ் வழியை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர், துணைவேந்தர்களுடன் சந்திப்பு நடைபெற்றது
என்றார்.