You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
TNAU Open And Distance Learning Courses | வேளாண் பல்கலை பட்டயப்படிப்பு
TNAU Open And Distance Learning Courses
Tamil Nadu Agricultural Universities in India to start the Distance Learning programme. TNAU is offering various Open and Distance Learning courses viz., Agricultural based certificate courses, Diploma in Agri Inputs and Diploma courses in Agriculture and Horticulture to school dropouts, farming community, self-help groups and other unemployed youth with a view to empower them for self-employment and to develop as entreprenuer.
The Directorate of Open and Distance Learning, TNAU is re-launching the certificate course for Urban Dwellers after 10 years. This course mainly focus on the Urban Dwellers who aspire for distance learning and interested in starting self-employment programme in limited land areas of urban cities with efficient usage of land, transportation, infrastructure, public spaces, sanitation, air and water quality etc.
The courses viz., Landscape and Ornamental Gardening, Nursery technologies, Roof and Kitchen Garden and Solid Waste Management are being launched now.
TNAU Open And Distance Learning Courses Details
Since, 2005, TNAU has ventured to impart technical knowledge on 44 nos. of agricultural based certificate courses and among them for the courses viz., Coconut Cultivation Technology, Mushroom Production, Medicinal plants, Bakery and Confectionary products, Sericulture, Sugarcane Production Technology, Nursery Technology and propagation of horticultural crops, Waste recycling and vermicomposting, Organic Farming, Bee Keeping and Landscaping and Ornamental Gardening has gained more importance among the learners and the courses are being offered at various centers of TNAU regularly.
As per the Central Government amendments regarding the Fertilizer Order and Pesticide, 2015, the basic educational qualification for the input dealers was fixed as Diploma in Agriculture. Hence, based on the need of the input dealers, the Diploma in Agri Inputs course has been designed and is being offered since, 2016.
In continuation of gaining of adequate momentum by the Diploma in Agri Inputs course among the learners, furthermore 12 Diploma courses had been initiated from 2021. Among 12, the courses viz., Diploma in Horticultural Technologies, Herbal Sciences, Coconut Production Technologies, Sugarcane Technologies, commercial production of Bio-fertilizers and Bio-control agents and Tea Plantation Management are being enrolled by more number of learners and are offered at various centers of TNAU regularly.
TNAU Open And Distance Learning Courses Full Details
The Directorate of Open and Distance Learning is taking constant efforts in preparing Self Learning Materials (SLM) with active participation of scientists of respective disciplines for the benefit of learners. Besides this, the course materials were prepared with utmost care and included with illustrations, pictures, tables etc. to promote continuous learning.
All the courses of Directorate of Open and Distance Learning are being offered all over Tamil Nadu. The contact classes will be conducted only during saturdays and sundays for the benefit of the candidates at TNAU Main campus and all sub-campuses, KVKs and Research Stations of TNAU.
Hence, the farming community, entrepreneurs, self-help groups and other learners who aspire for education and interested in establishing agro based industries in rural areas are requested to get enrolled in this directorate and reap the benefit.
Directorate of Open and Distance Learning Contact Details
The Director, Open and Distance Learning Tamil Nadu Agricultural University
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம் 2005ம் ஆண்டில் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்ட உழவர்கள், மகளிர்கள், இளைஞர்கள், பள்ளிப்படிப்பை தொடர இயலாதவர்கள், சுயதொழில் முனைவோர்கள், கிராமங்களில் சிறுதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் தங்களின் தொழில்நுட்ப அறிவையும், அனுபவங்களையும் வளர்த்துகொள்ளும் வகையில் இவ்வியக்ககத்தின் வாயிலாக பல சான்றிதழ் பாடங்கள், வேளாண் இடுபொருள் பட்டப்படிப்பு மற்றும் இதர பட்டயப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம் 10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்புற மக்களுக்கான சான்றிதழ் படிப்பை மீண்டும் தொடங்குகிறது. தொலைதூர கல்வியை விரும்பும் நகர்புற வாசிகள் மற்றும் நகரங்களின் வரையறுக்கப்பட்ட நிலப்பகுதிகளில் நிலம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, பொது இடங்கள், சுகாதராம், காற்று, நீர் தரம் போன்றவற்றை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் சுய வேலை வாய்ப்பு திட்டத்தை தொடங்க ஆர்வமுள்ள நகர்புறவாசிக்களுக்காக இந்த பாடங்கள் துவங்கப்பட்டன.
வேளாண் பல்கலை பட்டயப்படிப்பு படிப்பு விவரம்
இதில் அலங்காரத் தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் பராமரிப்பு தொழில்நுட்பங்கள், மாடி மற்றும் வீட்டுத்தோட்டம் அமைத்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் இந்த ஆண்டு துவங்கப்பட உள்ளன. திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககத்தில் 44 வகையான ஆறுமாத கால சான்றிதழ் நடத்தப்பட்டு வருகின்றன.
அவற்றில் தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், காளான் வளர்ப்பு, மூலிகை பயிர்கள், தோட்டக்கலை பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர் பெருக்கமுறைகள், நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள், திடக்கழிவு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்கள், அங்கக வேளாண்மை, பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பங்கள், ரொட்டி மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், தேனீ வளர்ப்பு, அலங்கார தோட்டம் அமைத்தல் ஆகிய பாடங்கள் பயில்வோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு என்ற பட்டயப்படிப்பானது உரம், விதை, பூச்சி மருந்து விற்பனையாளர்கள் உரிமம் பெறுவதற்கான பட்டயப்படிப்பு ஆகும். இப்பட்டய படிப்பானது 2015ம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று முதல் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மேலும் 12 வகையான புதிய பட்டயபடிப்பு பாடங்கள் இவ்வியக்ககத்தின் வாயிலாக கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பண்ணை தொழில்நுட்பம், தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், மூலிகை அறிவியல், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், பண்ணை கருவிகள், மற்றும் அதன் பராமரிப்பு அங்கக வேளாண்மை, கரும்பு தொழில்நுட்பங்கள், வேளாண் கிடங்கில் தரக்கட்டுப்பாடு, வணிக ரீதியில் உயரியல் பூச்சி மற்றும் உயிர் பூஞ்சான் நோய் கொல்லிகள் உற்பத்தி, உணவு அறிவியல் மற்றும் பதப்படுத்துதல், மருத்துவ பயிர்கள் உற்பத்தி மற்றும் தர நிர்ணயம் மற்றும் தேயிலை உற்பத்தி மேலாண்மை உள்ளிட்ட பாடங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
கற்பவர்களின் நலனுக்காக அந்தந்த துறை விஞ்ஞானிகளின் தீவிர பங்கேற்புடன் சுய கற்றல் கையேடுகளை தயாரிப்பதில் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இது தவிர, பாடபுத்தகங்கள் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டு தொடர்ச்சியான கற்றலை மேம்படுத்துவதற்காக விளக்கப்படங்கள், அட்டவணைகள் போன்றவற்றுடன் அச்சிடப்படுகின்றன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை மற்றும் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் வேளாண்மை கல்லூரிகள் , ஆராய்ச்சி நிலையங்கள், மற்றும் வேளாண் அறிவியல் நிலயைங்களிலும் இப்படிப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வழங்கப்படுகின்றன. எனவே கிராமப்புறங்களில் மற்றும் நகர்புறங்களில் விவசாயம் சார்ந்த தொழில்களை நிறுவ ஆர்வமுள்ளவர்கள், விவசாய சமூகத்தினர், தொழில்முனைவோர், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பிற ஆர்வமுள்ளவர்கள் இவ்வியக்ககத்தின் மூலம் பதிவு செய்து செய்து பயன்பெறுமாறு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம்
மேலும் விவரங்களுக்கு
இயக்குனர், திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம்,