தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் 6வது கோவை மலர் கண்காட்சி அதன் பல்கலைக்கழகத்தில் வரும் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது.
11 ஆண்டுகளுக்கு பின், ஆறவாது முறையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இக்கண்காட்சி நடத்துகிறது மற்றும் இந்த கண்காட்சி பிப்ரவரி 23ம் தேதி முதல் 25ம் தேதி நடக்கிறது. இந்த கண்காட்சியில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.இதில் மல்லிகை, செண்டு, சம்பங்கி, கனகாம்பரம், தாமரை, செவ்வந்தி போன்ற உதிரி மலர்களை கொண்டும், ரோஜா, கார்னேசன், ஆர்கிட், ஆந்தூரியம், வில்லியம், மற்றும் சொர்கத்து பறவை போன்ற கொய்மலர்களாலும், அரியவகை அயல்நாட்டு மலர்களையும் கொண்டு கலைநயத்துடன் பல்வேறு உருவ அமைப்புகளாக அலங்கரிக்கப்பட உள்ளன. இயற்கை வள பாதுகாப்பு சுற்றுச்சுழல் முக்கியத்துவத்தை பேணல், மலர்களின் முக்கியத்துவம் மற்றும் வணிக மதிப்பு ஆகியவற்றை பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்து செல்வதே இக்கண்காட்சியின் நோக்கமாகும்.5 மலர்கண்காட்சியின் மையக்கருத்துக்கு தொடர்ந்து வரவேற்பு இருந்ததால், 6வது மலர் கண்காட்சியும் அத்தகைய வண்ணம் அமையும் பொருட்டு கனவுகள் மலரட்டும் என்ற மையக்கருத்துடன் நடைபெற உள்ளது. மேலும், அலங்கார மலர் கலையை ஊக்குவிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு சிறந்த அலங்கார மலர் கலையை காட்சிப்படுத்தும் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தோட்டக்கலை சார்பு நிறுவனங்கள், வேளாண்மை சார்ந்த தொழில் நிறுவனங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் சித்த மருத்துவத்துறைகள் ஆகியவை கண்காட்சியில் கலந்துகொண்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. 100க்கும் மேற்பட்ட வணிக அரங்குகள் விழாவில் அமைக்கப்பட உள்ளன.