You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNAU Diploma Counselling Date 2023 | TNAU Diploma Rank List | வேளாண்மை பல்கலைக்கழகம் டிப்ளமோ கலந்தாய்வு

TNAU Spot Admission 2023  

TNAU Diploma Counselling Date 2023 | TNAU Diploma Rank List | வேளாண்மை பல்கலைக்கழகம் டிப்ளமோ கலந்தாய்வு

TNAU Diploma Counselling Date 2023

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் போன்ற பட்டப்படிப்புகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்கு மொத்தம் 2036 விண்ணப்பங்கள் பெறப்பெற்றன. இவற்றுள் 2025 விண்ணப்பங்கள் தகுதியானவைகளாக கருதப்பட்டு, அவற்றுக்கான தரவரிசை பட்டியல் 27.1.2023 அன்று www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Read Also: TNAU Open And Distance Learning Courses Details

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான பட்டயப்படிப்புகளுக்கான இணையதள கலந்தாய்வு 28.1.2023 முதல் 30.1.2023 வரை நடைபெற உள்ளது. இணையதள கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல் தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இணையதள கலந்தாய்வின்போது விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை சான்றிதழ் சரிபார்ப்பின்போது விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணம் பெற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் உள்நுழைந்து 28.1.2023 முதல் 30.1.2023 மாலை 5 மணி வரை தங்கள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பம், கல்லூரி மற்றும் பாட இடஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படும். இதுகுறித்த தெளிவான படிப்படியான செயல்முறை விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல்ல முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு 1.2.2023 அன்று அண்ணா அரங்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறும். கலந்தாய்விற்கான வழிமுறைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட மாணவர்களை இணையதளம் வாயிலாகவும் ெதரிந்துகொள்ளலாம். இதன் பொருட்டு ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் 0422-6611345 என்ற தொலைபேசி வாயிலாகவும் மற்றும் ugadmissons@tnau.ac.in என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொண்டு தௌிவு பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.