தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7.5% இடஒதுக்கீடு (பொதுப்பிரிவு (Academic Stream) ஏற்பட்ட காலியிடங்களுக்கு மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சமர்ப்பிப்பு 22.07.2024 அன்று மொத்தம் 200 இடங்களுக்கு நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ / மாணவியருக்கு தற்காலிக சேர்க்கை அவர்கள் பெற்ற தரவரிசை மதிப்பெண், விருப்பப்பாடம் மற்றும் சாதிய அடிப்படையில் வழங்கப்பட்டன.
அவ்வாறு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட மாணவ/ மாணவியர், தங்களின் அசல் சான்றிதழ்களான (10-ம் மற்றும் 12 -ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ் (Community Certificate) மற்றும் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) உடன் 22.07.2024 அன்று கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு தங்களின் சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.இத்தகவல்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட மாணவ/ மாணவியர்களுக்கு அவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் (email) முகவரிக்கும் மற்றும் அலைபேசி எண்ணிற்கும் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவ/ மாணவியர்களின் பட்டியல் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.மாணாக்கர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் (email) மூலமாகவும் 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலும் வாரநாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.