தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுர்கள் மார்ச் 4ம் தேதி தொடங்கி, நடைபெற்றது. இத்தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன. 11ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் பின்னர் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் மே 14 அதாவது, இன்று செவ்வாய்கிழமை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் காலை 10 மணி முதல் தங்களது மதிப்பெண் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற முகவரியில் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.