You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN TRB PG RESULT OUT 2022 | trb.tn.nic.in | முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

Typing exam apply Tamil 2023

TN TRB PG RESULT OUT 2022 | trb.tn.nic.in | முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

TN TRB PG RESULT OUT 2022 | trb.tn.nic.in |

TN TRB எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிக்கான தேர்வு முடிவுகளை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கீழ் செயல்படும் தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை -I, கணினி பயிற்று நிலை - I ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் வெளியிட்டது.

Read Also This: TRB Age Relaxation GO No 144 For Teachers Appointment

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

அதனை தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை -I, கணினி பயிற்றுநர்கள் நிலை – I, இல் இருக்கும் 2020-21 காலிபணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் 12.02.2022ம் தேதி முதல் 20.20.2022ம் தேதி வரை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பு மற்றும் தேர்வு முடிவுகளை தற்போது ஆசிரியர் தேர்வு வரியம் வெளியிட்டுள்ளது. இந்த தோ்விற்கான உத்தேச விடை குறிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியானது. இதில் 4,276 தேர்வர்களின் இணைய வழியிலான விடைக்குறிப்பு ஆட்சேபனைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவை 115 பாட வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டன. அவர்களின் இறுதி முடிவின் அடிப்படையில் இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் விடைகள் திருத்தம் செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளது. இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை காண்க - CLICK HERE