TN Temporary Teachers Latest News | தற்காலிக ஆசிரியர்கள் இறுதி நாள் வரை பணியாற்ற உத்தரவு
TN Temporary Teachers Latest News
பள்ளி கல்வி ஆணையர் க.நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, 2022-2023 கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறையின் அரசு, நகராட்சி, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை 2022-2023ஆம் கல்வி ஆண்டின் கடைசி பள்ளி வேலை நாள் முடிய பணியில் தொடர அனுமதிக்கும்படி, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.