அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31.5 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

TN Temporary Teachers Job Scam? | தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தில் தில்லுமுல்லு ?

TN Temporary Teachers Job Scam? | தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தில் தில்லுமுல்லு ?

TN Temporary Teachers Job Scam?

பள்ளி கல்வித்துறையில், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனங்களை, தனியார் நிறுவனங்கள் வாயிலாக மேற்கொண்டதில், முறைகேடு நடந்துள்ளது என அம்பலமாகி உள்ளது. மாவட்ட வாரியாக நியமன பட்டியலை, ஆய்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஆசிரியர் பதவியில் 14,000 காலியிடங்கள் உள்ளன. அவற்றில், தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள நடப்பாண்டில் 109.91 கோடி ரூபாய் ஒதுக்கீட்ப்பட்டுள்ளது. இடை நிலை ஆசிரியர்களுக்கு ரூ 12,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ 15,000, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ 18,000 மாதம் சம்பளமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தை, பள்ளி தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியே மேற்கொள்ளவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியது.

Read Also: தற்காலிக ஆசிரியர்கள் பணி அறிவிப்பு

ஆனால், சில உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, மாநில அளவில், சில குறிப்பிட்ட தனியார் தன்னார்வ நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்களில் தகுதியானவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், மறைமுகமாக வசூல்வேட்ைட நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு வலு சேர்ப்பது போல, தூத்துகுடி மாவட்டத்தில் , தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது.

ஆதவா என்ற தனியார் நிறுவனம், பட்டதாரிகள் பலரிடம் பல லட்சம் ரூபாய் வரை மறைமுக நன்கொடை பெற்று, அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளது. அவ்வாறு நியமனம் பெற்றவர்களுக்கு 4 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வரவிரல்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் பள்ளி கல்வித்துறைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் கூறும்போது, பள்ளி கல்வித்துறை மத்திய அரசின் நிதிைய செலவிடும் பிரிவான, ஒருங்கிணைந்த கல்வி திட்ட பிரிவின் வழியே , தற்காலிக பணி நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திட்டத்திற்கு மட்டுமே, மத்திய அரசு ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக ஒதுக்கின்றன. அந்த நிதியில் பெரும் பகுதி, தனியாார் நிறுவனங்கள் வழியே செலவிடப்படுகிறது. இந்த அடிப்படையில் தான், தன்னார்வ நிறுவனங்களின் வழியே, தற்காலிக ஆசிரியர்களும், நியமிக்கப்பட்டு உள்ளனா்.

எனவே, பள்ளி கல்வித்துறையில் தனியார் துறையில், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் உள்ள நிலையில், இந்த பின்னணி குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, உண்மையை கண்டறிய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையில், அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் எப்படி நடந்தது, பரிந்துரைத்தது யார், நிராகரிக்கப்பட்டவர்கள் யார், அதற்கான காரணம் என்னவென்று துவங்கியுள்ளது. இதன் முடிவில், பணி நியமனத்திலும் தில்லுமுல்லு நடந்துள்ளதா என்பது தெரியவரும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News Source and Credit Goes to Dinamalar Tamil Daily

Related Articles

Latest Posts