TN Temporary Teachers Job Latest News in Tamil | தற்காலிக ஆசிரியர்கள் பணி அறிவிப்பு
TN Temporary Teachers Job Latest News in Tamil
பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, செயல்முறை வழிகாட்டுதலின்படி, 2023-2024ஆம் கல்வியாண்டிற்கு பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் உள்ள காலிப்பணியிடங்கள்/மகப்பேறு விடுப்பில் சென்றதாலும், பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்து அவற்றுள் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பதிலியாகவும், பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக நியமனங்களை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Read Also: டிஆர்பி ஆசிரியர் பணி வயது வரம்பு அரசாணை
இந்த நேர்வில் 2023-2024 கல்வியாண்டிற்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும்போது சென்ற ஆண்டு (2022-2023) மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு மிகாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளும்படியும், அவ்வாறு சென்ற ஆண்டைவிட கூடுதலாக நியமனம் செய்யப்பட தேவை இருப்பின், எவ்வளவு தேவை என்பதை கடிதம் வரியலாக தெரிவித்து, பின்னர் நியமனம் செய்துகொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள இடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க வாய்ப்பு உள்ளது.
TO DOWNLOAD NOTIFICATION
PDF - CLICK HERE