அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29 C
Tamil Nadu
Tuesday, May 30, 2023

தற்காலிக ஆசிரியர் நியமனம் விண்ணப்பங்களை கவனமாக பரிசீலிக்க உத்தரவு

தற்காலிக ஆசிரியர் நியமனம் விண்ணப்பங்களை கவனமாக பரிசீலிக்க உத்தரவு

தற்காலிக ஆசிரியர் நியமனம்

பள்ளி கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட 24 மாவட்டங்களில் மட்டும் (சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஆளுகைக்குட்பட்ட 14 மாவட்டங்கள் நீங்கலாக) தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து விண்ணப்பதாரர்களிடம் இருந்து மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

இந்நேர்வில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் W.P.No 16704/2022ன் மீது மாண்பமை உயர்நீதிமன்றம் 7.7.2022ல் வழங்கியுள்ள இடைக்கால ஆணையில் “This court in continuation to the earlier order passed by this court dated 1.7.2022 make it clear that applications in respect of teachers who possess the qualifications of pass in TET alone be processed.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றியும், கால அட்டவணைப்படி பணிகளை மேற்கொள்ளுமாறும் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

Read Also This: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் சிக்கல்?

தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும், முதுகலை ஆசிரியர் பதவிக்கு, முதுகலை ஆசிரியர் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்களையும் மட்டுமே தற்காலிக நியமனம் செய்யத்தக்க வகையில் விண்ணப்பங்கள் பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து 1.7.2022 நாளிட்ட செயல்முறைகளில் பத்தி எண் 3ல் வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுள் ஒரு காலிபணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர் விண்ணப்பம் செய்திருப்பின் பத்தி 4ல் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமையின் அடிப்படையில் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்சொன்னவாறான நடவடிக்கைகள் கீழ்காணும் கால அட்டவணைப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

  1. மாவட்ட கல்வி அலுவலகங்களில் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை அசிரியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நாள் – 12.7.2022 மற்றும் 13.07.2022
  2. மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை 1.7.2022 நாளிட்ட செயல்முறைகளில் பத்தி 5ல் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி தேர்வுக்குழு பரிசீலித்து தகுதியான நபரை இறுதி செய்ய வேண்டிய நாட்கள் – 14.7.2022 மற்றும் 15.7.2022
  3. தேர்வுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட தகுதியான நபர் குறித்த பட்டியலை முதன்மை கல்வி அலுவலரிடம் தலைமை ஆசிரியர் சமர்ப்பிக்க வேண்டிய நாள் – 16.7.2022
  4. தோ்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்ட பட்டியலை கூர்ந்தாய்வு செய்து முதன்மை கல்வி அலுவலர் ஏற்பளிக்க வேண்டிய நாள் – 18.7.2022
  5. முதன்மை கல்வி அலுவலரால் ஏற்பளிக்கப்பட்ட தற்காலிக நியமனத்திற்கு பள்ளி மேலாண்மை குழுவின் ஒப்புதல் பெறப்பட வேண்டிய நாள் – 19.7.2022
  6. தற்காலிக நியமனம் பெற்றவர் பணியில் சேர்க்கப்பட வேண்டிய நாள் – 20.7.2022

மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி, எவ்வித புகாருக்கு இடமின்றி செயல்படுமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Temporary Teachers Appointment PDF – Click Here

Related Articles

Latest Posts