You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Temporary Teachers Appointment News | தற்காலிக ஆசிரியர் பணி அறிவிப்பு

Typing exam apply Tamil 2023

TN Temporary Teachers Appointment News | தற்காலிக ஆசிரியர் பணி

TN Temporary Teachers Appointment News

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையிலு் கூறியிருப்பதாவது,

பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவற்காகவும், கொரோனா காலத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட கற்றல் இழப்பு மற்றும் இடைவெளியை சரிசெய்வதற்காகவும் பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் குறையாமல் இருப்பதற்காகவும் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இல்லம் தேதடி கல்வி, எண்ணும் எழுத்தும் கட்டகங்கள், மொழிப்பெயர்ப்பு, மின்பாடப்பொருள் தயாரிப்பு போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு கல்விப்பணியில் ஈடுபட்டிருக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக அவர்கள் பணிபுாியும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டியுள்ளது.

அதன்படி 111 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், 32 பட்டதாரி ஆசிரியர்களும், 39 இடைநிலை ஆசிரியர்களும் என மொத்தம் 182 ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்ககத்தின் கீழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு கல்வி பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிறைவடைய இன்னும் சிறிது காலம் என்பதால் இவர்களுக்கு பதிலாக பள்ளி மேலாண்மை குழுவின் (எஸ்எம்சி) தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

தற்காலிக ஆசிரியர் பணி வழிகாட்டு நெறிமுறைகள்

முதலில் 3 மாதங்களுக்கு மட்டும் எஸ்எம்சி வாயிலாக அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், பணிியில் மூத்த ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் (உயா் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்) ஆகியோரை உறுப்பினா்களாக கொண்ட ஒரு குழு மூலமாக தேர்வு செய்து தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்து இது முற்றிலும் தற்காலிகமாது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

எஸ்எம்சி வாயிலாக தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ 7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000, முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ12,000 மதிப்பூதியம் வழங்கப்படும்.

இந்த ஆசிரியர்களுக்கு பதிலாக அதே பாடப்பிரிவில் கற்றல், கற்பித்தல் தொய்வின்றி நடப்பதற்காக மட்டுமே தற்காலிகமாக அந்தந்த ஆசிரியர் பணிக்கான தகுதி பெற்ற நபர்களை எஸ்எம்சி வாயிலாக பணி அமா்த்த வேண்டும்

மாநில இயக்ககத்தில் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும் எஸ்எம்சி மூலம் நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுப்பு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TEMPORARY TEACHERS APPOINTMENT PDF - CLICK HERE