TN Teachers TET Promotion | பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி எதிர்த்து மேல்முறையீடு
TN Teachers TET Promotion
தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதில் முக்கிய சிக்கல் என்னவென்றால், கடந்த 2011ஆம் ஆண்டிற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால் தகுதி தேர்வு அவசியம் என உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதேசமயம் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என்ற அனுமதியால் சற்றே ஆறுதல் அடைந்தனர்.
மேலும், ஆசிாியர் பதவி உயா்விற்கு தகுதிதேர்வு கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் பதவி உயர்விற்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அதிர்ந்து போயினர். இதனை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டது. பதவி உயர்வு என்பது பணி மூப்பு, பணி முன்னுரிமை அடிப்படையில் தான் வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், அதிகாரப்பூர்வ ஆசிரியர் மனசு திட்டம் வாட்ஸப் சேனலில் கூறியிருப்பதாவது, ஆசிரியர் மனசு பிரிவில் வந்த கோரிக்கைகள் மற்றும் பல்வேறு ஆசிாியர் அமைப்புகளின் கோரிக்கை ஏற்று, பணியில் உள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தகுதித்தேர்வு அவசியம் இல்லை என்னும் முடிவில் அரசு இருப்பதால் உச்சநீதிமன்றத்தில் பள்ளி கல்வித்துறையில் மேல்முறையீடு செய்துள்ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.