Read Also: NHIS Contact Number
அந்த மனுவில், 10-03-2020 க்கு முன் உயர்கல்வி முடித்தவர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட CEO அலுவலகம் வழியாக 3 முறை பெறப்பட்டும், இன்று வரை அதாவது இரண்டரை வருடங்களாக அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. மூன்றாவது முறை பட்டியல் பெறப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை தெரியப்படுத்தி, உடனடியாக ஊக்க ஊதியம் மற்றும் நாளது வரை நிலுவைத் தொகை வழங்க வேண்டும். எனவே, அரசாணைகளின்படி 10-03-2020 க்கு முன் உயர்கல்வியினை முடித்து அதற்கான ஊக்க ஊதியம் பெறாதவர்களுக்கு உடனடியாக ஊக்க ஊதியம் மற்றும் நாளது வரை நிலுவைத் தொகை வழங்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.