TN TEACHERS DEMAND | ஆசிரியர்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார் – அமைச்சர் பேட்டி
TN TEACHERS DEMAND
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விழா நடைபெற்றது. இதில் 10, பிளஸ் 1, பிளஸ்2 தேர்வில் முதல் மூன்ற இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் அவரது ஆசிரியர்களுக்கும் நிதி மற்றும் பரிசுகளை அமைச்சர் பி மூர்த்தி வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது, நான் இந்த பள்ளியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அளிக்கிறது. 100 சதவீதம் தேர்ச்சி பெற அனைத்து ஆசிரியர்களும் பாடுபட வேண்டும். பள்ளி என்ன உதவிகளை கேட்டாலும் செய்ய தமிழக அரசு தயராக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மாணவர்களின் நலன் கருதி, பள்ளி கல்விக்காக ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
Also Read: Anbil Mahesh Press Meet| முக்கிய அறிவிப்பு என்ன?
ஆசிரியர்களின் கோரிக்கைகளை விரைவில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார். நீட் தேர்விற்கு மாணவர்களை ஆசிரியர்களை தயார் செய்து அவர்களுக்கு சிறப்பான எதிா்காலத்தை உருவாக்குவது ஆசிரியரின் கடமை ஆகும். வணிகவரி மூலம் நிதி வருவாய் இந்தாண்டு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சக எம்எல்ஏக்கள், பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |