You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Teachers Appointment Latest News | பட்டதாரி தேர்வர்களின் ஆசிரியர் கனவு பணால்

Kanavu Aasiriyar award list 2023

TN Teachers Appointment Latest News | பட்டதாரி தேர்வர்களின் ஆசிரியர் கனவு பணால்

TN Teachers Appointment Latest News

திமுக ஆட்சிக்கு வந்து, 2 ஆண்டுகள் முடியும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பட்டதாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணி நியமனங்களுக்கு பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி சார்பி் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து, 7ம் தேதியுடன் இரண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால், இதுவரை அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணிகளுக்கு புதிய நியமனங்களை மேற்கொள்ளவில்லை.

தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் டிஆர்பி கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிட்ட வருடாந்திர பணி நியமன நடவடிக்கை குறித்த நாட்காட்டியில் அறிவித்த எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் உதவி பேராசிரியர்களை நியமிக்க 4 ஆயிரம் பணியிடங்களுக்கு ஜனவரியில் தே்ாவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சொன்னபடி நடத்தவில்லை. விரிவுரையாளர் பணிக்கு ஆகஸ்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு அறிவிக்கையும், வேறு முன்னேற்றமின்றி அப்படியே முடங்கிவிட்டது.

Read Also: ஆசிரியர் தேர்வு வாரியம் இன்றைய செய்தி

கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு 155 விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு 1,674, இடைநிலை ஆசிரியர் பணிக்கு 3,987 காலியிடங்களுக்கான தேர்வையும் நடத்தவில்லை. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி, கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர், இன்ஜினியரிங் கல்லூரி உதவி பேராசிரியர் பணி மொத்தம் 10,371 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தும் அறிவிப்பும் கிடப்பிலேயே உள்ளதாக பட்டதாரிகள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் உரிய விசாரணை நடத்த அரசின் பள்ளி, கல்லூரிகளில் தரமான கல்வியை வழங்கும் வகையில் ஆசிரியர் காலிபணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், இதற்கான போட்டித் தேர்வுகளை இந்த மாதமே அறிவிக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மட்டும் தொடக்கப்பள்ளிகளில் 4,989 இடைநிலை ஆசிரியர், 6ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த 5,154 பட்டதாரி ஆசிரியர், பிளஸ் 2 வரை பாடம் நடத்த 5,188 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 13, 331 இடங்கள் ஏற்கனவே காலியாக உள்ளன. இத்துடன் இந்த மாதம் 31ம் தேதியுடன் ஏராளமான ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர். அவர்களையும் சேர்த்தால் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை கிட்டதட்ட 15 ஆயிரத்தை எட்டும் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

News Source and credits goes to Dinamalar