TN Teacher Transfer Counselling Schedule 2023 | ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அட்டவணை 2023
TN Teacher Transfer Counselling Schedule 2023
பள்ள கல்வித்துறை இந்த கல்வியாண்டில் (2022-23) ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கோரி விண்ணப்பிக்க தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் (Minimum one year service in present station) என்ற நிபந்தனை கடைபிடிக்கத் தேவையில்லை என்று தெரிவிக்கலாகிறது.
பொது மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை
ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது EMIS இணையத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login IDஐ பயன்படுத்தி EMIS வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது ஏதேனும் தங்கள் சார்பான விவரங்கள் தவறுதலாக இருப்பின் (பிறந்ததேதி, பணியில் சேர்ந்த நாள், தங்கள் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கென உள்ள Login IDயில் Teacher Profile சென்று தவறாக உள்ள விவரங்களை சரிசெய்யப்பட்ட பின்னர் மீளவும் தங்களுடைய Individual Login IDஐக்கு சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.
ஆசிரியரின் மாறுதல் விண்ணப்பத்தினை பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிடுதல்) செய்த பின்னர் முதல் கட்டமாக பள்ளித் தலைமை ஆசிரியர் Approval செய்யப்படவேண்டும்.
மேற்படி பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியினை சம்மந்தப்பட்ட (BEO / DEO (S) / CEO) முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.
Read Also: பழைய ஓய்வூதிய திட்டம் முதல்வர் மவுனம் கலைக்க வேண்டும்
அரசு உயர்/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியரால் ஒப்புதல் செய்யப்பட்ட பின்னர் அவ்விண்ணப்பத்தின் நகலினை சார்ந்த ஆசிரியரே நேரில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும். அதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என சரிபார்க்க வேண்டும்.
மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை (Priority) கோரி விண்ணப்பிக்கும்போது அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை (ஆவண நகல்) இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
தற்போது பணிபுரியும் பள்ளியில் மாறுதல் பெற்ற வகை (ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்படல் வேண்டும்) i)விருப்ப மாறுதல் ii)மனமொத்த மாறுதல் iii)நேரடி நியமனம் iv)பதவி உயர்வு V)நிருவாக மாறுதல் vi)அலகு மாறுதல் vii) பணிநிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
இதே போலவே தொடக்கக் / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாறுதல் கோரி EMIS விண்ணப்பித்த விண்ணப்பங்களை சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒப்புதல் (Approval) அளிக்கவேண்டும். தொடக்கக் / நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் EMIS மாறுதல் கோரி விண்ணப்பித்த விண்ணப்பங்களை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் ஒப்புதல் (Approval) அளிக்கப்படவேண்டும். பின்னர் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பத்தின் ஒரு நகலினை அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலரிடம் நேரில் ஒப்படைத்திடல் வேண்டும்.
அரசு உயர்நிலைப்/மேல்நிலைப் தலைமை ஆசிரியர் மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் முறை
ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login ID பயன்படுத்தி EMISல் வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.
மாறுதலுக்கு விண்ணப்பித்த அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு) தங்களுக்குரிய Login IDஐ பயன்படுத்தி சரிபார்த்து ஒப்புதல் (Approval) அளிக்கப்படவேண்டும். அவ்வாறே அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் ஒப்புதல் (Approval) அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எனில் மாவட்டக் கல்வி அலுவலரிடமும் / அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எனில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.
மாறுதல் கோரி விண்ணப்பித்த தொடக்கக் / நடுநிலை / அரசு உயர்நிலை 1 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் உரிய அதிகாரம் பெற்ற ஒப்புதல் (Approval) அளிக்கும் அலுவலரால் விவரங்கள் சரியாக இல்லை என நிராகரிக்கப்படுமாயின் (Rejected) அவ்விண்ணப்பித்தினை கூர்ந்தாய்வு செய்து சரியான தகவல்களுடன் மீளவும் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
பொதுமாறுதல் கல்வி அலுவலர்களுக்கான அறிவுரைகள்
மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் ஒப்புதல் (Approval) அளித்த பிறகு ஒரு பிரதியினை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் (Approval) அளிக்க ஏதுவாக கல்வி தகவல் மேலாண்மை முறை EMIS மூலமாக தனியாக ஒரு User Name and Pasword அனுப்பி வைக்கப்படும். அதனை பயன்படுத்தி ஆசிரியர்களின் மாறுதல் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை சரிபார்த்து உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்.
மேற்படி மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 01.05.2023 அன்று 05.00 பிப வரை இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.
மாறுதல் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை (Priority) அடிப்படையில் விண்ணப்பத்தில் காரணம் குறிப்பிடும்போது அதற்குரிய சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலரால் சரிபார்த்திடல் வேண்டும்.
31.5.2023 அன்றைய நிலவரப்படி அனைத்துவகையான ஆசிரியர்களின் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை (Eligible Vacancy Only) CEO /DEO (Ele) Login IDஐ பயன்படுத்தி EMIS இணையதளத்தில் அதற்கென உள்ள உரிய படிவத்தில் 30.04.2023க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். ஆசிரியரின்றி உபரிக் காலிப் பணியிடத்தினை (Surplus Post Without Person) எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடமாக (பதிவேற்றம் செய்திடக்கூடாது) கருதகூடாது.
மேலும் காலிப்பணியிட விவரங்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்த முடிக்கப்பட்டவுடன் பின்னர் சேர்க்கை / நீக்கம் / திருத்தங்கள் போன்றவைகளுக்கு இடமளிக்காமல் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பணிநிரவல் (Deployment) கலந்தாய்வுக்கு மட்டும் காண்பிக்கப்படும் கூடுதல் தேவையுள்ள (Need Post) காலிப்பணியிடங்களையும் மேற்படி இணையத்திலேயே அதற்கென உள்ள படிவத்தில் பதிவேற்றம் செய்திடல்வேண்டும்.
பொதுவான அறிவுரைகள்
மேல்நிலைப் பிரிவில் தாவரவியல் மற்றும் உயிரியியல் பாடப்பிரிவில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும்போது தாம் பயின்ற Main Subject (Major) குறிப்பிடப்படவேண்டும் மற்றும் எந்த பணியிடத்தில் (Post Details Botony Biology) பணிபுரிகிறார் என்ற விவரத்தினையும் or குறிப்பிடப்படவேண்டும்.
கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலகம் / பள்ளி அரசு மற்றும் அரசுத் துறையின் நிருவாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் (Competent authority) பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். கணவன்-மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30கி.மீ மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்படவேண்டும்.
மனமொத்த மாறுதல்கள் (Mutual Transfer) மற்றும் அலகுவிட்டு அலகு மாறுதல் & துறை மாறுதல்கள் (Unit Transfer) சார்பான விண்ணப்பங்கள், பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்படவேண்டும்.
மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அவர்களின் முன்னுரிமையின் (Seniority Basis) அடிப்படையில் அவரது சுழற்சி (turn) வரும்பொழுது உள்ள காலிப்பணியிடத்தினை மட்டுமே தெரிவு செய்ய ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவருடைய turn முடிந்த பின்னர் ஏற்படும் Resultant Vacancyஐ தெரிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.
மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter district transfer) கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது தற்போது பணிபுரியும் மாவட்டத்தினை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினையே தெரிவு செய்யப்படவேண்டும். (தனியரின் தற்போது பணிபுரியும் மாவட்டம் EMIS இணையத்தில் காண்பிக்கப்படமாட்டாது)
மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகைபுரியாமலோ (Absent & Late) தாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.
மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் இணைப்பில் காணும் காலஅட்டவணையில் தெரிவித்துள்ளவாறு மாறுதல் கோரி விண்ணப்பிக்கப்பட்ட ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் உரிய தேதியில் வெளியிடப்படும். அப்பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் எதும் இருப்பின் அதனை EMIS Online வழியே உரிய விவரங்களை தெரிவித்திடவும். இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) தங்கள் அலுவலகத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட EMIS Logind IDஐ பயன்படுத்தி மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திடவும் உரிய முறையீடுகள், திருத்தங்கள் இருப்பின் அதனை சரிசெய்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.
மேற்படி திருத்தங்கள் முறையீடுகள் ஆகியனவை மேற்கொள்ளப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Final Seniority List & Vacaney List) வெளியிடப்பட்ட பிறகு திருத்தங்கள் / ஏதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இருப்பின் கண்டிப்பாக
உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களில் 40% மாற்றுத்திறனாளி, 40% கண்பார்வையற்றவர் மற்றும் NCC பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் பணிநிரவல் கலந்தாய்வில் விலக்களிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அடுத்த இளையவரை (Thereby the immediate next junior teacher in the same cadre (same subject) will be deployed) அதேப் பாடத்தில் பணிநிரவலுக்கு உட்படுத்தப்படவேண்டும்,
கலந்தாய்வு - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு முதன்மைக் கல்வி அலுவலர்களின் EMIS LOGIN மூலமாகவும், தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டக் கல்வி அலுவலர்களின் (தொடக்கக் கல்வி) EMIS LOGIN மூலமாகவும் நடத்தப்படும்.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு பதவி வாரியாக இணைப்பில் காணும் காலஅட்டவணையின் அடிப்படையில் மாறுதல்கள் / பதவி உயர்வு கலந்தாய்வுகள் நடைபெறும். கலந்தாய்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் (கணினி, மின்இணைப்பு, இணையதளம், இருக்கை வசதி போன்ற இதர வசதிகளை) மேற்கொள்ளப்படவேண்டும். கலந்தாய்வுகள் நடைபெறும் அன்றைய நாளில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை சிறப்பாக நல்லமுறையில் நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேற்காண் விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி) தெரிவிக்கலாகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,