நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே கீரம்பூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசியராக பணியாற்றி வந்த பன்னீர்செல்வம் என்பவர் மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகளை அவர் ஆபாசமாக செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள், தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். Read Also: ஊட்டி ஆசிரியர்கள் சஸ்பெண்ட்ஆத்திரமடைந்த அவர்கள் பள்ளி முன்பு நேற்று திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னா், அந்த ஆசிரியரிடம் செல்போன் பறித்து பார்த்தபோது, ஏராளமான ஆபாச படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நிறைய படங்களையும் அவர் அழித்துள்ளார். அதனை ரெக்கவரி எடுத்துபார்த்தபோது, மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆசிரியரை தனி அறையில் பூட்டிவிட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஏடிஎஸ்பி மணிமாறன் தலைமையிலான வந்த போலீசாரிடமும், பெற்றோர் வாக்குவாதம் செய்தனர். போலீசார் அவர்களை பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்தினர். பின்னர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இதுபோன்று, சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டாரத்திற்குட்பட்ட முளுவி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஹரிஹரன் என்பவர் அடிக்கடி பள்ளிக்கு போதையில் வருவதையடுத்து, கல்வி அதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டனர்.