TN Teacher Salary Issue | ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் சரியாக வழங்கப்படுவதில்லை
TN Teacher Salary Issue
ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை சரியான தேதியில் தமிழக அரசு வழங்கவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு – கடந்த ஆண்டு இறுதியில் நிர்வாக முைறயில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்த லட்சகக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு 4 மாதங்களுக்கான ஊதியம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை.
இந்த பிரச்னை சற்று ஒய்ந்த நிலையில், தற்போது அரசு பள்ளிகளில் மாதம் ரூ 15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியமா்த்தப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகார் வந்துள்ளது.
ஒரு சில மாவட்டங்களில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. வருங்கால வைப்பு நிதி முன்பணம், ஒய்வூதிய பயன்கள் என அனைத்திலும் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். எனவே ஆசிரியர்களுக்கான ஊதியத்ைத உடனுக்குடன் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.