TN Teacher Protest Latest News | இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் பள்ளி பாதுகாப்பு சங்கம் ஆதரவு
TN Teacher Protest Latest News
தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் பள்ளி பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவா் சந்திரசேகரன், மாநில செயலாளர் இராம்குமார், மாநில பொருளாளர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் போராடி வரும் SSTA மாநில அமைப்பு மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் பள்ளி பாதுகாப்பு சங்கம் முழு ஆதரவை வழங்குகிறது.
தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து கால தாமதம் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்படி கோரிக்கையாக வைக்கின்றோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.