TN Teacher Latest News | பயோமெட்ரிக் கருவிகள் வாபஸ் ஆசிரியர்கள் குஷி
TN Teacher Latest News
அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் வருகைப்பதிவு, கருவிகளை அதிகாரிகள் திரும்ப பெறுவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகைப்பதிவில் முறைகேடுகளை தடுக்க, பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா காரணமாக 2020 மார்ச்சுக்கு பின், பயோமெட்ரிக் முறை கைவிடப்பட்டது.
இதையடுத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் அல்லது அவர்களின் அனுமதி பெற்ற பள்ளி அலுவலர்கள், மொபைல் போன் செயலி வழியாக தினசரி வருகையை பதிவு செய்துவருகின்றனர். இதில் பணிக்கே வராமல் பல ஆசிரியா்கள் வெளியே சுற்றினாலும், செயலியில் வருகை பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த குளறுபடியை தடுக்க, மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவை அமல்படுத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்குமு் பணிகளுக்கு, பயோமெட்ாிக் கருவிகள் தேவைப்படுவதால், அரசு பள்ளிகளிடம் இருந்து அவற்றை திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் செய்தி.