TN Teacher Education University Latest News | கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி
TN Teacher Education University Latest News
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) மூ சௌந்தராஜன் அனைத்து இணைவு பெற்ற கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது,
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்வியியல் கல்லூரிகளில், இக்கல்வியாண்டில் பிஎட் மற்றும் எம்எட் பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்்கு, கல்லூரி, மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலை மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு இந்த பல்கலைக்கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, கல்லூரி அளவிலான போட்டிகள் பிப்ரவரி 9 மற்றும் 10ம் தேதியும், மாவட்ட அளவிலான போட்டிகள் 16 மற்றும் 17ம் தேதியும், மாநில அளவிலான போட்டிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு, அனைத்து கல்லூரி முதல்வர்கள், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியா்கள் சிறப்ப நடத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.