TN Teacher Counselling on December 20 | டிசம்பர் 20ல் ஆசிரியர் கலந்தாய்வு
TN Teacher Counselling on December 20
பள்ளி கல்வித்துறையில் உள்ள உபரி ஆசிரியா்கள் பணி நிரவல் செய்யப்படவுள்ளனர். அதற்கு பிறகு, அவர்களுக்கான கலந்தாய்வு டிசம்பர் 20ம்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2023-2024 ஆம் ஆண்டுக்கு மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிா்ணயம் செய்யப்பட்டது. இதில் உபரி ஆசிரியர்களாக உள்ளவர்கள் தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவதால் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட உள்ளனர்.
இதையடுத்து, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் விவரங்களை பாடம், பதவி வாரியாக பட்டியல் தயார் செய்ய வேண்டும். பணியில் சேர்ந்தவர்களில் இளையவர் உபரி ஆசிரியராக கணக்கில் கொள்ளப்படுவா்.
கூட்டு மேலாண்மை பள்ளியாக இருந்தால், அதற்கு உள்பட்ட பள்ளிகளில் உள்ள உபரி ஆசரியர்கள் விவரத்தை நவம்பர் 20ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும் அத்தகைய கூட்டு மேலாண்மை பள்ளிகளுக்கான பணிநிரவலை நவம்பர் 30ம் தேதிக்குள் பதிவேற்றம் வேண்டும். தொடர்ந்து பணி நிரவல் முடிந்த பின்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் எஞ்சிய உபரி ஆசிரியர்கள் மற்றும் காலி பணியிட விவரங்களை டிசம்பர் 5ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் வேண்டும்.
இந்த தகவல் அடிப்படையில், மாவட்டத்துக்குள் பணி நிரவல் கலந்தாய்வு டிசம்பர் 20ம் தேதி நடைபெறும். மேலும், மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும். இதில் எந்த புகாருக்கும் இடம் அளிக்காதவாறு, சிறந்த முறையில் கலந்தாய்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.