தொடக்க கல்வி இயக்ககுனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய தகவலில் கூறியிருப்பதாவது, அனைத்து மாவட்ட கல்விஅலுவலர்களுக்கு, இன்று மாறுதல் கோரும் ஆசிரியரின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலர் தினமும் சரி பார்த்து உரிய ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.
வட்டார கல்வி அலுவலர்களால் வழங்கப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இரு அலுவலர்களும் ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு ஆசிரியர்களின் விண்ணப்பம் முழுமை அடைந்ததாக கணினி எடுத்துக் கொள்ளும். எனவே எவ்வித விடுதலும் இன்றி மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து இரு அலுவலர்களும் தினம்தோறும் ஒப்புதல் அளித்து நிலுவைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு அவர் கூறியுள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் (வட்டாரத்திற்குள் - 534, கல்வி மாவட்டத்திற்குள் –-188, மாவட்டத்திற்குள் –- 192, மாநிலத்தில் –- 202) பட்டதாரி ஆசிரியர்கள் (வட்டாரத்திற்குள் - 273, கல்வி மாவட்டத்திற்குள் –-116, மாவட்டத்திற்குள் –- 118, மாநிலத்தில் –- 151) தொடக்கப்பள்ளி தலைைம ஆசிரியர்கள் (வட்டாரத்திற்குள் - 258, கல்வி மாவட்டத்திற்குள் –-46, மாவட்டத்திற்குள் –- 24, மாநிலத்தில் –- 34) நடுநிலைப்பள்ளி தலைைம ஆசிரியர்கள் (வட்டாரத்திற்குள் - 3, கல்வி மாவட்டத்திற்குள் –-27, மாவட்டத்திற்குள் –- 18, மாநிலத்தில் –- 15) மொத்தம் 2199 பேர் விண்ணப்பித்துள்ளனர்.