ஆசிரியர் கலந்தாய்வு 2022 – பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு
பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை
2021-22ம் கல்வியாண்டிற்கு அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறை ஆணைகள் வெளியிடப்பட்டு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையில் வழிகாட்டுதலின்படி மாறுதல் கோரும் ஆசிரியர்கள் உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் மேற்படி ஆசிரியர்களுக்கு மாறுதல்கள், பதவி உயர்வுகள், பணி நிரவல் சார்பான கால அட்டவணை வெளியிடப்பட்டு, பதவி வாரியாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
மேற்படி கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல்கள், பதவி உயர்வுகள், பணி நிரவல் ஆணைகள் பெற்ற அனைத்து வகை ஆசிரியர்களும் 24.2.2022 அன்று பணியில் இருந்து விடுவிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
Read This | ஆசிரியர் கலந்தாய்வு: ஆசிரியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
இந்த நிலையில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் (IFHRM)ன்படி ஊதியம் பெற்று வழங்குதல் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்த்திடும் பொருட்டு மேற்படி கலந்தாய்வில் கலந்துகொண்டு உரிய ஆணைகள் பெற்ற (மாறுதல்கள், பதவி உயர்வுகள், பணிநிரவல்கள்) அனைத்து வகை ஆசிரியர்களையும் 28.02.2022 பிற்பகல் விடுத்து 1.3.2022 அன்று பணியில் சேரத்தக்க வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |