TN Surplus Teacher Counselling | உபரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு
TN Surplus Teacher Counselling
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாற்றம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் , பணியாளர்கள் அரசு ஊதியம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உள்ளூர் தனியார் பள்ளிகள் போட்டி காரணமாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதசாரத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்களா என்றும் கூடுதல் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்களா என்றும் பள்ளி கல்வித்துறை கணக்கெடுப்பு செய்து வருகிறது.
Read Also: குடியரசு தின விழா கட்டுரை
இதில் சில அரசு உதவிபெறும் பள்ளிகளில் பல ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. அதனால் கூடுதலாக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை காலியாக உள்ள பணியிடங்களை நியமித்து சமப்படுத்தும் வகையில் பணி நிரவல் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதே குழுமத்தை சேர்ந்த மற்ற பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்காக மாவட்ட அளவில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நேற்று இந்த கலந்தாய்வு தொடங்கியது. 25ம் தேதி வரை நடக்க உள்ளது. பிற மாவட்டங்களில் வெவ்வேறு தேதிகளில் இந்த கலந்தாய்வு நடக்க உள்ளது.