அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற்ற ஜூன்/ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ்2), மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ்1), பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவினை, மதிப்பெண் பட்டியலாக / தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக கீழ் குறிப்பிட்ட நாட்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 26.7.2024 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் அறிந்து கொள்ளலாம். அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 30.7.2024 அன்று வெள்ளிகிழமை பிற்பகல் 2 மணி முதல் அறிந்துகொள்ளலாம். இதுதவிர, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 31.7.2024 அன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் அறிந்துகொள்ளலாம். மேற்கண்ட 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று “RESULT” என்ற வாசகத்தை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில், Supplementary Exam, Jun/Jul 2024 - Result –- Statement of Marks Download” என்ற வாசகத்தினை Click செய்து தோ்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.