TN Supplementary Exam 2021 |பத்தாம் வகுப்பு துணை தேர்வு
TN Supplementary Exam 2021
தனித்தேர்வர்கள் பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் 2021 நடக்கும் பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு எழுத விரும்பும் தனித்தேர்வுகள் இன்று காலை (7/8/2021) 11.30 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கல்வி மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு (Government Examination Service Center) சென்று காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை (ஞாயிறு தவிர) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இவ்வாறு 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Read Also: TN ESLC EXAM 2022
சிறப்பு அனுமதி திட்டத்தில் 12ம் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது அதிக கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும். எனவே தனித்தேர்வர்கள் கொடுக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்குமாறு
TN Education Info சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், கல்வி அலுவலகம் தொடர்புகொண்டு விவரங்களை கேட்டு பெறலாம்.