TN State Good Teacher Award latest News | நல்லாசிரியர் விருது பட்டியலில் சில ஆசிரியர் பெயர்கள் நீக்கம்
TN State Good Teacher Award latest News
நல்லாசிரியர் விருது பட்டியலில் இருந்து, டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு சார்பில், தேசிய ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு 50 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்ைத சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவர் அதில் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல, மாநில அளவிலான நல்லாசிரியர் விருதுக்கு மாவட்ட வாரியாக பரிந்துரை பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் இருந்து தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான பரிசீலனை நடந்தது. அதில் அமைச்சர்கள், கட்சி பிரமுகர்களின் சிபாரிசு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள், பள்ளிகளில் சரியாக பாடம் நடத்தாமல் வணிக ரீதியாக டியூசன் நடத்தும் ஆசிாியர்களின் பெயா்களும் நீக்கப்பட்டுள்ளன.
சில ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றி இருந்தும், அவர்கள் பெயர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பாிந்துரை பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அதுபோன்ற ஆசிரியர்கள் விபரங்கள், மாவட்டங்களில் கேட்டு பெறப்பட்டு, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 5ம் தேதி சென்னை நடக்கும் விழாவில், தேர்வு செய்யப்பட்ட 390 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
-தினமலர் செய்தி 1.9.2023