You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Sports minister latest news | விளையாட்டு பாடவேளைகளை கடன் வாங்காதீர்கள்

Typing exam apply Tamil 2023

TN Sports minister latest news | விளையாட்டு பாடவேளைகளை கடன் வாங்காதீர்கள்

TN Sports minister latest news

பள்ளிகளில் உடற்கல்வி (விளையாட்டு) பாடவேளைகளை கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள் என விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தின விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 114 அரசு பள்ளிகளுக்கு கேடயங்களும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 180 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது, சிறந்த பள்ளியாக தேர்வான மாணவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போததாது. மற்ற பள்ளிகளுக்கும் முன்மாதிரியாக திகழ்வதுடன், விளையாட்டு துறையில் சிறந்து விளங்க வேண்டும்.

அந்த வகையில் நமக்கு இந்த 114 பள்ளிகளில் இருந்து விளையாட்டு வீரர்களும் கிடைக்கவுள்ளனர். பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகளை கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள். மாணவர்கள் விளையாட வாய்ப்பு தாருங்கள். ஏனெனில் கல்வி என்பது வெறும் பாடபுத்தகத்தை படிப்பதல்ல. பாடபுத்தகத்துக்கு வெளியிலும் மாணவர்கள் திறன் வளர்த்துக்கொள்ள வேண்டும். சந்திராயன் 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் அரசு பள்ளிகளில் படித்தவர்கள். இதேபோல், அரசு பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களும் சிறந்த சாதனையாளராக வர வேண்டும். அதற்கு அரசு துணை நிற்கும். இவ்வாறு பேசினார்.

இதில் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.