TN School Reopening Latest News | பள்ளி திறப்பு அன்பில் மகேஷ் அதிரடி பேட்டி
TN School Reopening Latest News
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால், இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தெரிவித்தார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நிகழ் கல்வியாண்டில் (2023-24) 1 முதல் பிளஸ் 2 வகுப்புக ளுக்கு பள்ளிகள் ஜூன் 7-ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், கோடை வெயில் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.
6 முதல் பிளஸ்2 வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 14-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
Read Also:முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்
தற்போது திட்டமிட்டப்படி 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் நாளில் மாணவர்களை உற்சாகமாக வர வேண்டும், இலவச பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை உள்பட நலத்திட்ட பொருட்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படுவதால் ஒரு பாடத்துக்கு 4 மணி நேரப் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. அதனால் பாடங்களை நடத்த ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.
மாணவர்களுக்கு கற்றல் சுமை இல்லாதவாறும், ஆசிரியர்களின் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாதவாறும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும், என்றார் அவர்.