TN School Reopening Latest News | பள்ளி திறப்பு தள்ளி போகுமா?
TN School Reopening Latest News
தமிழகத்தில் பள்ளி திறப்பை, ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஏப்ரல் 28ம் தேதி முடிந்து, ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் 1ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். அதாவது, ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பள்ளி திறப்பை தள்ளிக வைக்க வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆசிரியர்கள் தரப்பில் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Read Also: பிஎஸ்ஜி இலவச விடுதி மாணவர் சேர்க்கை
இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது, அனைத்து மாவட்டங்களிலும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. பெரும்பாலான இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகிறது. அதனால், பெண்கள், சிறுவர், சிறுமியர் வெளியில் தலை காட்ட முடியாத நிலை உள்ளது.
அதேபோல் அரசு பள்ளிஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. ஆசிரியர்கள் பலர், இடமாறுதல் பெற்று வருகின்றனர். அவர்கள் புதிய இடங்களில் பணியில் சேர, கால அவகாசம் வேண்டும். மேலும், மாணவர்களுக்கான பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட தயராகி, பள்ளிகளுக்கு வர வேண்டியுள்ளன. வெளியூர்களுக்கு சென்றுள்ள பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஊருக்கு திரும்பி வர பஸ், ரயில் போன்றவற்றில் டிக்கெட் கிடைக்காமல் உள்ளனர். அதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் பள்ளி திறப்பை ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.