TN School Reopening latest News | பள்ளி திறப்பு எப்போது 2023
TN School Reopening latest News
வெயில் கடுமையாக இருப்பதால், பள்ளிகள் தாமதமாக திறப்பது குறித்து தற்போது முடிவு செய்ய இயலாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில் ஜேஇஇ நுழைவுத்தேர்வு எதிர்கொள்வதற்கான பயிற்சி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் ஒர் அங்கமான இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னை சைதாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இத்திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
Read also: பள்ளி கல்லூரிகளுக்கு திடீர் விடுமுறை
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தான் இந்த பயிற்சி திட்டத்தை தொடங்கியுள்ளோம். வரும் காலங்களில் அதிகப்படியான மாணவர்கள் ஜேஇஇ பயிற்சியில் சேருவார்கள் என எதிா்பார்க்கிறோம். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதற்கு காலதாமதம் ஏற்படுமா என்று கேட்கிறீர்கள். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறக்கும்போது வெயிலின் தாக்கத்தை வைத்து முடிவு செய்யலாம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதற்கான அனைத்து சட்ட போராட்டங்களும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.