TN School Reopening Date 2023
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் ஒன்று அல்லது ஐந்தாவது தேதிகளில் பணிகள் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. அதே சமயம் பள்ளி இறுதிநாள் ஏப்ரல் 28ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அதாவது 2023-2024ஆம் கல்வியாண்டில் எப்போது திறக்க வேண்டும் என்பது ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதையடுத்து, கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் ஜூன் ஒன்று அல்லது ஐந்தாம் தேதிகளில் பள்ளிகளை மீண்டும் திறக்க கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகிலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.