TN School Reopen Date 2023 | பள்ளி திறப்பு எப்போது | ஜூன் 7ம் தேதி திறப்பு
TN School Reopen Date 2023
ஜூன் மாதம் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் ஐந்தாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை சற்று தள்ளி வைக்க கோரிக்கை எழுந்தது. இதுபற்றி முதலமைச்சருடன் ஆலோசிப்பதாக கூறியிருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் மாதம் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
Read Also: வேளாண்மை பல்கலைக்கழகம் அட்மிஷன் 2023
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியவர் அவர் ஜூன் மாதம் ஐந்தாம் தேதிக்குப்பின் வெப்பம் குறையும் என்று வானிலை மையம் கூறியிருப்பதாக குறிப்பிட்டார் மேலும் கோடை விடுமுறை காலத்தில் வகுப்புகள் நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவர் நிருபா்களிடம் கூறியதாவது,
வெயில் கொடுமை காரணமாக ஒரு ஒரு வார காலமாக ஒவ்வொரு தரப்பினரும் தொடர்ந்து எப்போது பள்ளிகள் திறக்கப்படும் அதில் தாமதம் ஏற்படுமா அதை ஒத்தி வைப்பீர்களா கேட்டுக் கொண்டே இருந்தார்கள். முதலைமச்சர் சிங்கப்பூர் நாட்டில் இருந்தாலும் சரி ஜப்பான் நாட்டில் இருந்தாலும் சரி தொடர்ந்து அதற்கான என்ன முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் நாங்கள் ஒரு இரண்டு தேதிகளை அவரிடம் அவர்கள் வழங்கினோம் இந்த வெயிலுடைய தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதெல்லாம் கண்டு அறிந்து மாண்புமிகு தமிழ்நாட்டுடைய முதலமைச்சர் அவர்கள் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பட்ட மாணவர் செல்வங்களுக்கான பள்ளிக்கூடங்கள் திறக்கின்ற தேதியை ஜூன் மாதம் ஏழாம் தேதி என்று அறிவித்திருக்கின்றார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.