TN School Registers PDF | பள்ளி பதிவேடு பராமரிப்பு பணி | ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
TN School Registers PDF
பள்ளி கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசு மாணவர் மற்றும் ஆசிரியர் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. இதனால், அரசு, உதவிபெறும் பள்ளிகளில் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து சுமார் 72 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயில்கின்றனர்.
பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர்களுக்கு முக்கியச் செய்தி
ஆசிரியர்கள் பணிச்சூழல் இணக்கமான முறையில் இருப்பதை உறுதி செய்யவும், தேவையற்ற நிர்வாக பணிச்சுமையை குறைக்கவும், தங்களது பணி நேரத்தை மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிக்காக முழுமையாக ஈடுபடுத்தி வகையில் 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி கல்வித்துறை மான்ய கோரிக்கை விவாதத்தின்போது பள்ளி கல்வி அமைச்சர் அவர்கள் பள்ளி பதிவேடுகளை கணினி மயாக்கப்படும் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி 11 பதிவேடுகளை நீக்கம் செய்திடவும், 81 பதிவேடுகளை எமிஸ் வாயிலாக கணினியில் மட்டும் பராமரித்திடவும்.
11 பதிவேடுகள் நீக்கம்
- 1. Treasury Register
- 2. Salary Deduction Register
- 3. Supplementary Cash Register
- 4. Permanent Balance Register
- 5. Pending Special Fees Register
- 6. Penalty /Fine Register
- 7. UN-Disburse Payment (UDP) Register
- 8. Bill Register
- 9. Contingency Register
- 10. Retail Cost Register
- 11. Individual Aid Register
எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பேடுகள்
மேலும் தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறைகளின் படி, எண்ணும் எழுத்தும் திட்டத்தை 1, 2 மற்றும் 3ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு பராமரிக்க தேவையில்லை என தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் 4 முதல் 12ஆம் வகுப்பு பாட ஆசிரியர்களும் பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தல் போதுமானது. பாடத்திட்டம், பணி செய்ப்பதிவேடு ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை என அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN School Registers PDF Circular - Download Here