TN School Rain Holidays today | பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
TN School Rain Holidays today
கனமழை காரணமாக இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
நேற்று முதல் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கனமழை பெய்ததது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி மாணவர்கள் நலன் கருதி, அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்தனர். இந்த நிலையில், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
Read Also: கல்வி உதவித்தொகை மோசடி
இதையடுத்து, தொடா் மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ளாா். தொடர் மழை காரணமாக அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அதன் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.