TN School Education Latest News | பள்ளி கல்வி இயக்குனர் சங்கங்களுடன் கலந்துரையாடல்
TN School Education Latest News
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சார்பில் கலந்துரையாடல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று, பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில் டிட்டோஜாக் கூட்டமைப்பில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் ஆகஸ்ட் 1ம் தேதி முற்பகல் 10.30 மணியளவில் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
டிட்டோஜாக் கூட்டமைப்பு இணைந்துள்ள ஒவ்வொரு சங்கத்தின் சார்பாக ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், சங்கங்கள் சார்பில் கருத்துகளை தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.