TN School Education Director | பள்ளி கல்வி இயக்குனருக்கு தலைமை செயலாளர் கடிதம்
TN School Education Director
ஓய்வுபெறும் நாளில் தமிழ்நாடு தலைமை செயலாளர் வெ இறையன்பு, பள்ளி கல்வி இயக்குனர் முனைவர் அறிவொளிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மாணவர்கள் மின்னணு உபகரணங்களை அதிகமாக வாசிப்பதால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால், பொது அறிவு தொடர்பான அவர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை.
வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும்பொருட்டு,ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஒன்றை ஏற்படுத்தலாம். அதில் மாதந்தோறும் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கலாம்.
இவ்வாறு செய்வதன்மூலம் வாசிப்பது மட்டுமின்றி, தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு சாத்தியக்கூறுகள் ஏற்படும். சிறந்த முறையில் நூலை மதிப்புரை செய்கிற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதோடு இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்களை கொடுத்து ஊக்குவிக்கலாம். இது அவர்களிடம் சமூகம் தொடர்பான சிந்தனைகளையும் ஆக்கப்பூர்வமான விழுமியங்களையும் ஏற்படுத்தும் என்பதால் இதை விரிவாக செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.