Also Read: வாலாட்டும் வட்டார கல்வி அலுவலர் – கட்டிங் கொடுத்தால்தான் மனுக்கள் நகரும்
மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு உபகரணங்கள் பெற தொடக்க பள்ளிகள் ரூ.5000, நடுநிலை பள்ளிகள் ரூ.10,000 பள்ளி பராமரிப்பு நிதியிலிருந்து பயன்படுத்த வேண்டும் கல்வி அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. விதிகள் படி, இதுபோன்ற பொருட்கள் வாங்க, பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, தலைமை ஆசிரியர்கள் தரமான பொருட்களை கடைகளில் நேரடியாக வாங்க வேண்டும். ஆனால், சேலம் மாவட்டத்தில், கல்வி அதிகாரிகள் உத்தரவின்பேரில், தற்போது பல அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு தரமற்ற பொம்மை விளையாட்டு பொருட்கள் தனியார் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் plastic cricket ball, Soft Ball (Small), Tennis Ball, Basket Ball, Shotput உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.4949. இதில் நான்கு விளையாட்டு பொருட்களான Saucer Cone 10 * 10 = 100, multi-colored Parachute 550* 1 = 550, Foot Pump 640 * 1 = 640, Foam Javelin 150 *1 = 150 வழங்கப்படவில்லை. நான்கு பொருட்களின் மதிப்பு ரூ. 1,440 ஆக உள்ளது. இதுதவிர, விலை மதிப்பு பட்டியலில் ரூ.51 குறைக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட ரூ.5,000 மதிப்பிலான பொருட்களில் ரூ 1500க்கான பொருட்கள் வழங்கப்படாமல் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் என்றால், இதனை கண்டுகொள்ளாமல் இருக்க கூட்டு கொள்ளையாக தலைமை ஆசிரியர்களுக்கு தலா ரூ ஆயிரம் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைமை ஆசியர்களுக்கு ஆயிரம் என்றால், மாவட்ட, மாநிலத்தில் இருக்கும் கல்வி அதிகாரிகளுக்கு எவ்வளவும் கப்பம் கட்டப்படுகிறது என்பது தெரியவில்லை விவரம் அறிந்த ஆசிரியர்கள் கூறுகின்றனர். பழைய ஆட்சியில் இந்த நிலை என்றால், புதிய ஆட்சியிலும் இதே நிலைதான் தொடர்கிறது என ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர். தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது, தரமற்ற பொருட்களை கொண்டு மாணவர்கள் விளையாடும்போது, அதன் ஆயுட்காலம் அரை மாதத்திற்கு கூட தாக்க பிடிக்க முடியாது. Foot Pump இல்லாமல், எப்படி பந்துகளுக்கு காற்று நிரப்ப முடியும், பஞ்சர் கடைகளுக்கு சென்றுதான் காற்று நிரப்ப முடியம். தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்க வைக்கும், இவர்களின் பிள்ளைகளுக்கு இதேபோன்று விளையாட்டு பொருட்களை கொண்டு விளையாட வைத்தால், அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?. அரசு பணம், ஏழை மாணவர்கள் என்பதனாலயே இவ்வளவு அலட்சியபோக்கு.