TN School Education Department Latest News | பள்ளி கல்வித்துறையில் 80 கோடி வீண்
TN School Education Department Latest News
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கும் திட்டத்தின் விதிகளை முறையாக பின்பற்றாததால் சுமார் 80 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு வரையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த செயலாக்க தணிக்கையை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை வெளியிட்டுள்ளது.
தணிக்கை அறிக்கையில் தொிவிக்கப்பட்டு தகவல்கள்.
கடந்த 2011-2012ஆம் ஆண்டு முதல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கணினி திறனை மேம்படுத்த இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2017-18ஆம் ஆண்டு வரை பிளஸ் 2 மாணவர்களை போல பிளஸ் 1 மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து தணிக்கை செய்யப்பட்டதில், இடைநிலை கல்வி மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை கொள்முதல் செய்வதற்கும் அவற்றை வழங்குவதற்கும் ஏந்த கால முறையையும் பின்பற்றவில்லை. முன்மொழிவை சரியான நேரத்தில் இடைநிலை கல்வி தயாரிக்கவில்லை. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டுகளில் 14.83 லட்சம் மாணவர்கள் (80 சதவீதம்) மட்டுமே பள்ளிகளில் படிக்கும்போதே மடிக்கணினிகளை பெற்றுள்ளனர்.
Read Also: தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதியுங்கள்
கடந்த 2017-2018ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற 2.32 லட்சம் மாணவ, மாணவியர் பள்ளி படிப்பை படிப்பதற்கு முன்பாகவே மடிக்கணினிகளை பெறவில்லை. அதேபோல், கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் போட்டி தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்க வேண்டியிருந்தது. அதன்பேரில் எல்காட் நிறுவனம் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 60 ஆயிரம் மடிக்கணினிகளை தலா ரூ.12.370 விலையில் கொள்முதல் செய்தது.தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதியுங்கள்
ஆனால், 8079 மடிக்கணினிகள் மட்டுமே போட்டித் தேர்வு எழுதும் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதம் இருந்த 51921 மடிக்கணினிகள் மற்ற மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 55 ஆயிரம் மடிக்கணிகள் இருப்பில் இருந்தபோதும் தேவைப்படும் மாணவ, மாணவியருக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேட்டரி உத்தரவாதம், ஆகஸ்ட் 2020யுடன் காலாவதியாகவிட்டது. மூன்று ஆண்டுகள் மேலாக வழங்கப்படாத மடிக்கணினிகள் மதிப்பு ரூ.68 கோடியே 51 லட்சம் பயன்படுத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளது.
5.47 கோடி வீண்
கடந்த 2019-2020ஆம் ஆண்டு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் அரசு இலவச காலணிகளை வழங்கி வருகிறது. இவற்றை கொள்முதல் செய்யும்போது இருப்பில் உள்ள காலணிகளை கருத்தில்கொள்ளவில்லை. பல ஆண்டுகளாக சம்மந்தப்பட்ட துறையால் முறையான வழிமுறை மற்றும் கண்காணிப்பு பின்பற்றப்படாதால் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் காலணிகளின் இருப்பு அதிகரித்து கொண்டே வந்துள்ளது. இதனால், 2019-2020ம் ஆண்டின் இறுதியில் 3.46 லட்சம் காலணிகள் எந்த பயனும் இல்லாமல் துறையிடமே கிடப்பில் உள்ளது. இதனால், 5.47 கோடி வீணாக செலவழிக்கபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதபோல் பள்ளி பைகள் அதிகம் வாங்கி 7.28 கோடி வீண் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.