திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையம், திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு கல்வி உதவித்தொகை வாரிய அலுவலர் (Scholarship Board Officer) என்ற பெயரில் போன் செய்து, வங்கியில் இருப்பு தொகையை அறிந்துகொண்டு, பொதுமக்களிடம் நூதன முறையில் மோசடி செய்து பணம் பறித்து வருகின்றனர். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு கல்வி உதவித்தொகை மோசடி தொடர்பாக, எடுத்துரைத்து மோசடியில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாதவாறு தொடர்ந்து 15 நாட்களுக்கு காலை பள்ளி கூட்டத்தில் அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.