வங்ககடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10க்கும் மேற்பட்ட மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர். முன்னதாக, புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதபோல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.