TN Quarterly Examination Leave Latest News | காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு
TN Quarterly Examination Leave Latest News
1 முதல் 5ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை 3ம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தொடக்க கல்வி இயக்ககம் தொிவித்துள்ளது.
முன்னதாக, பள்ளி கல்வித்துறை காலாண்டு தேர்வு முடிந்து அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மட்டும் செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி முடிய முதல் பருவத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
பருவத்தேர்வு முடிந்து அக்டோபர் 9ம் தேதியிலிருந்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழக்கம்போல் பள்ளிகள் மீண்டும் செயல்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக வட்டாரம் தோறும் அக்டோபர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக வழங்கப்பட உள்ளது.
மேலும் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, இரண்டாம் பருவத்திற்கான வகுப்புகள் தொடங்கும் என தொடக்க கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.