TN Quarterly Examination leave 2023 | காலாண்டு தோ்வு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை
TN Quarterly Examination leave 2023
காலாண்டு விடுமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
அதன் நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலாக காலாண்டு மற்றும் பருவத்தோ்வு வரும் 15ம் தேதி தொடங்கி 27ம் தேதி நிறைவடைகிறது. அதாவது 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதியும் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும்19ம் தேதியும், 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 20ம் தேதி முதல் தேர்வு தொடங்கி வரும் 27ம் தேதியுடன் முடிகிறது.
பின்னர் 28ம் தேதியில் இருந்து 2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை 5 நாட்கள் மட்டுமே. தொடர்ந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அவசியம். மேலும் விடுமுறை நாட்களில் மாணவர்கள் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதிப்பார்த்து அதை வகுப்பாசிரியரிடமும் சமர்ப்பிப்பது, அதேபோன்று ஆசிரியர்களும் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்களை மதிப்பீடு செய்து அதனை எமிஸ் இணையத்தில் பதிவேற்றும் வேலைகளில் ஈடுப்பட வேண்டும்.
இதற்கெல்லாம் கால அவகாசம் இல்லாத சூழல் உள்ளது. எனவே, காலாண்டு விடுமுறையை ஏற்கெனவே இருந்ததை போன்று குறைந்தது 7 நாட்களுக்காவது விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கல்வித்துறை செயலாளர், இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.