TN Quarterly Examination 2023 | காலாண்டு தோ்வு தேதி அறிவிப்பு
TN Quarterly Examination 2023
தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது.
தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாள்கள், தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாள்காட்டி 2018ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டு நாள்காட்டியின்படி, காலாண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைெபறும்.
Read Also: தமிழ்நாடு முதலமைச்சர் திறனறி தேர்வு
6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், 9, 10ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெறும்.
அதில் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2 வரை காலாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீட்டு தோ்வு அட்டவணை விவரம் வெளியாக உள்ளது.